முதுகலை சான்றிதழ் படிப்பு
ஆயுஷ் மருந்து தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை


உடன் இணைந்து வழங்கப்படுகிறது
 • இந்திய ஆயுர்வேத மருத்துவ உற்பத்தியாளர்கள் சங்கம் (AMMAOI)

 • தமிழ்நாடு ஆயுர்வேத, சித்த, யுனானி மருந்துகள் உற்பத்தியாளர்கள் சங்கம் (TASUDMA)

 • பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையம் (CTMR) சென்னை

 1. பின்னணி
 2. இந்தியாவில் ஆயுஷ் மருந்துகள் மற்றும் சூத்திரங்கள் தயாரிக்க உரிமம் பெற்ற 8,000 க்கும் மேற்பட்ட யூனிட்டுகள் ஏறத்தாழ 8000 கோடி ரூபாய் மதிப்புள்ளவை. சுமார் 99 சதவிகிதம் வருடாந்திர வருவாய் 10 கோடி ரூபாய்க்கு குறையாமல் உள்ளன, 50 கோடி ரூபாயை கடந்து சுமார் 28 யூனிட்டுகள் மட்டுமே இருந்தன. அவர்கள் அனைவருமே உற்பத்தி சம்பந்தப்பட்ட பல்வேறு நடவடிக்கைளான உள்வரும் மூலப்பொருட்களை ஆய்வு செய்தல், உற்பத்தி செயல்முறையில் பல்வேறு நிலைகளை இயக்குதல், சோதனை மற்றும் தரக்கட்டுப்பாடு, கட்டுமம், தயாரிப்பு மேம்பாடு மற்றும் மருத்துவ சோதனை, சந்தைப்படுத்தல் இந்திய மற்றும் உலகளாவிய ஒழுங்குமுறை மற்றும் தரநிலைகளுடன் இணங்குதல் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு பயிற்சிப்பெற வேண்டும். ஆயுஷ்க்கும் மேற்கத்திய உற்பத்தி அமைப்புகளுக்கும் சில பொதுவான தேவைகள் இருக்கும், ஆயுஷ் மருந்துவத் துறையைச் சமாளிக்கும் பணியாளர்கள் நல்ல அறிவைப் பெற்றிருக்க வேண்டும், அவற்றின் அமைப்புகள் மற்றும் செயல்முறைகளில் குறிப்பிட்ட வெளிப்பாடு மற்றும் பயிற்சிகள் இருக்க வேண்டும்.

  இந்தியாவில் AYUSH தொழிற்துறையின் தேவைகளை முறையான மற்றும் வலுவான முறையில் நிறைவேற்றுவதே தற்போதைய திட்டத்தின் நோக்கம் ஆகும். ஆயுஷ் தொழிற்துறை , ஆர் & டி மற்றும் அரசாங்கத்திலிருந்து பெறப்படும் குறிப்பிடத்தக்க விகிதமாக பணியாளர் தொகுதி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து, இந்திய ஆயுர்வேத மருத்துவ உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஆயுர்வேத, சித்த, யுனானி மருந்துகள் உற்பத்தியாளர்கள் சங்கம் ,பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ள இத்திட்டத்திற்கு கல்லூரிக்குரிய விதிமுறை, அத்துடன் தொழிற்துறையின் முக்கியத்துவம் ஆகியவை தேவையாய் இருக்கிறது.

 3. கட்டமைப்பு மற்றும் பாடத்திட்டம்
 4. கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ் நிரலின் கூறுநிலை அமைப்பானது ஐந்து தொகுதிகளை கொண்டுள்ளது:

  • தொகுதி -1: தயாரிப்பு மேம்பாடு ஆயுஷ் தொழிற்துறை மருத்துவ சோதனைகளை உள்ளடக்கியது

  • தொகுதி -2: ஆயுஷ் தொழிற்துறையின் நல்ல உற்பத்தி செய்முறைகள்

  • தொகுதி - 3 : ஆயுஷ் மருந்து தயாரிப்பில் சோதனை & தரமான உத்தரவாதம்

  • தொகுதி -4 : ஆயுஷின் தயாரிப்பு & சந்தை மேலாண்மை

  • தொகுதி - 5 : ஆயுஷ் தொழில்துறையின் நியமங்கள் மற்றும் ஒழுங்குமுறை அம்சங்கள்

  முழு நேர அடிப்படையில் ஒவ்வொரு தொகுதியும் சுமார் 4 வார காலம் இருக்கும், மற்றும் ஒவ்வொரு தொகுதியின் பாடத்திட்டத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளதுப் போல கோட்பாடு மற்றும் செய்முறை கூறுகள் இரண்டையும் அது கொண்டிருக்கும். கூடுதலாக 20 வாரங்கள் எடுக்கும் இந்த 5 தொகுதிகள், 4 வார கால திட்டத்தின் இறுதியில் உள்ளிருப்புப் பயிற்சி/திட்டப்பணி ஆகியவற்றை கொண்டிருக்கும், அதன் மூலம் திட்டத்தின் மொத்த கால அளவு 24 வாரங்களாக இருக்கும்.ஆயுஷ் மருத்துவ தொழிற்துறையால் வழங்கப்படும் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் பட்டமேற்படிப்புசான்றிதழை.

  பெறுவதற்கு ஒரு தேர்வுக்குரியர் 24 வார முழுநேர நிரலை வெற்றிகரமாக முடிக்கவேண்டியுள்ளது.

  24 வாரங்கள் உள்ள (சுமார் 6 மாதங்கள்) நிரலுக்கு பதிலாக, தேர்வுக்குரியோரும் (ஏற்கனவே ஆயுஷ் அல்லது பிற தொடர்புடைய தொழிற்துறைகள் வேலை செய்யும் நபர்கள்) அவர்களது விருப்பத்தின் பேரில் ஐந்து தனித்தனி தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து வெற்றிகரமாக முடித்தவுடன் அந்த தொகுதிக்கு "நிறைவு சான்றிதழ்" கிடைக்கும். இவை தனித்துவமான தொகுதிகள் என்பதால், ஒவ்வொரு தொகுதிக்கும் "ஆயுஷ்-இன் அறிமுகம்" என்றூ 3-4 மணி நேரம் தேவைப்படும் பின்னணி வழங்கப்படும். தனிப்பட்ட தொகுதிகளுக்கு விண்ணப்பிக்க, ஒவ்வொரு தேர்வுக்குரியோரும் பட்டதாரியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு தேர்வுக்குரியோரும் இந்த முறையில் அனைத்து ஐந்து தொகுதிகளையும் முடித்துவிட்டால், பின்னர் 4 வாரங்கள் உள்ளிருப்புப் பயிற்சி/திட்ட வேலையை முடித்தவுடன் , அவன்/அவள் மேலும் கூடுதலாக "ஆயுஷ் மருந்து தொழிற்துறையின் பட்டமேற்படிப்பு சான்றிதழை" பெற முடியும், மேலும் அவன்/அவள் பட்டதாரி என சான்றளிக்கப்படுகிறது.

 5. தகுதி மற்றும் கட்டணம்
 6. பயிற்சித் திட்டத்திற்கு எடுக்கப்படுபவர்கள் BSMS/BAMS/BUMS,B.Pharm M.Pharm, B.Sc வேதியியல் /உயிரியல் அறிவியல் (அல்லது அதற்கு சமமான) போன்ற திட்டங்களில் இருந்து பட்டதாரிகளாக இருக்கவேண்டும் , BE -இன் உயிரி தொழில்நுட்பம் (அல்லது அதற்கு சமமான), அல்லது மற்ற ஒத்த பொருத்தமான திட்டங்கள். விளம்பரங்களின் ஊடாக ஒரு ஆண்டு திட்டத்திற்கு சேர்க்கை திறந்திருக்கும், தேவைக்கேற்ப ஒரு முறை அல்லது இருமுறை நடைபெறும், மற்றும் நிரலை வெற்றிகரமாக முடிக்க தேவையான பின்னணியும் தயார்நிலையும் விண்ணப்பதாரர்களுக்கு உண்மையில் இருப்பதை உறுதி செய்யவதற்கு சேர்க்கை நடைமுறைகள் பயன்படும். தொழிற்துறை மூலம் நிதியுதவி வழங்கப்படும் வேட்பாளர்களுக்கு, சேர்க்கை நடைமுறைக்கு விதிவிலக்குகள் பரிசீலிக்கப்படலாம், இருப்பினும் அடிப்படை தகுதித் தேர்வுகள் பின்பற்றப்படும்.

  ரூ. 49500/- கட்டணமாக இருக்கும் - முழு பாடநெறிக்கும், மற்றும் ரூ.9000/- ஒவ்வொரு தொகுதிக்கும், வரிகளைத் தவிர்த்து.

  பயிற்சித் திட்டத்தின் அனைத்து அம்சங்களும் பரந்த நெறிமுறைகளுக்கு இணங்க வேண்டும் மற்றும் அத்தகைய திட்டங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் வழிகாட்டல்களுக்கு தொடர்புடையதாக இருக்கும், மற்றும் AU-KBC மையம், AMMAOI, TASUDMA மற்றும் CTMR-ஆல் நியமிக்கப்பட்ட நியமனதாரர்களைக் கொண்ட ஒரு பாடநெறி ஆலோசனைக் குழுவாலும் , கூடுதலாக வெளிப்புற நிபுணர்களாலும் மேற்பார்வை செய்யப்படும்

  மேலும் மையத்தின் வேலை பற்றிய விவரங்களுக்கு ஆயுஷ் களத்தை பார்க்கவும் www.au-kbc.org/ayush-ism-np

  தொடர்புக்கு:
  டாக்டர் எம்.எஸ்.ராமசாமி
  ஒருங்கிணைப்பாளர், ஆயுஷ்/ஐ எஸ் எம்/என் பி பிரிவு
  AU-KBC ஆராய்ச்சி மையம்
  எம்.ஐ.டி வளாகம், அண்ணா பல்கலைக்கழகம்
  குரோம்பேட்டை, சென்னை-600044
  http://au-kbc.org/ayush-ism-np/pg_courses_ta.html

  குறிப்பு: ஜூலை 2017-ன் இடைப்பட்ட காலத்தில் வகுப்புகள் ஆரம்பம், ஜூலை 2017-ன் முதல் வாரத்தில் சேர்க்கை முடிவு

திரும்பி போக